சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் ஓட்டல் அதிபரிடம் கிடுக்கிப்பிடி

Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, பிரபல ஓட்டல் அதிபரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார், நான்கு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.

கடந்த, 2013ல் நடந்த, ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. டில்லி, மும்பை, சென்னை, கோவை என, பல்வேறு இடங்களில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.இந்த சூதாட்டம் தொடர்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஹிந்தி நடிகர் விண்டூ தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர், தொழில் அதிபர் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின், ஜாமினில் விடுவிக்கப் பட்டனர்.இந்த சூதாட்ட புள்ளிகளுக்கு, சென்னையில் உள்ள, ரேடிசன் புளூ ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், தஞ்சம் அளித்து வந்தது தெரியவந்தது. அவரும், சூதாட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை, போலீசார் கண்டறிந்தனர். எனவே, அவரிடமும் விசாரணை நடத்தினர்.பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அவர்கள், இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஏற்கனவே, 23 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விக்ரம் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், அவர் நேற்று ஆஜரானார். அவரிடம், போலீஸ் உயர் அதிகாரிகள், நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X