பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் நிரம்பிய கிணறுகள் புறநகரில் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜன 08, 2020
Advertisement
 மழையால் நிரம்பிய கிணறுகள் புறநகரில் விவசாயிகள் மகிழ்ச்சி

தாம்பரம்:தொடர்மழையால், புறநகர் ஏரிகள் மட்டுமின்றி, அனைத்து விவசாய கிணறுகளிலும், நீர் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அதே நேரம், நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க, கோடையில், இந்த கிணறுகளில் இருந்து நீர் எடுக்க வரும், தண்ணீர் லாரிகளுக்கு, கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை புறநகரில், 2019 நவ., இறுதியில் பெய்த பருவ மழையால், மாடம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், பெரும்பாக்கம், அகரம்தென், முடிச்சூர், வேங்கை வாசல், மணிமங்கலம் உட்பட, பல பகுதிகளில் உள்ள ஏரிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிரம்பின.வறண்டு கிடந்த விவசாய கிணறுகளும், முழு அளவில் நிரம்பி, விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்தன.

இதனால், விவசாயிகள், நடப்பாண்டில் இரண்டு போகம் அளவிற்கு விவசாயம் செய்ய முடியும் என, மகிழ்ச்சியில் உள்ளனர்.அதேநேரம், கடந்தாண்டு கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்ட போது, வேங்கை வாசல், மாடம்பாக்கம், திருவஞ்சேரி உட்பட பல இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து, நீரை உறிஞ்ச, தனியார் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கோடை முடிந்து சில நாட்கள் கழித்து, தண்ணீர் லாரிகள், வழக்கம் போல், கிணறுகளில் இருந்து நீரை எடுக்க துவங்கின.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, புறநகரில் உள்ள விவசாய கிணறு களில் இருந்து நீரை உறிஞ்ச, தண்ணீர் லாரிகளுக்கு, வருவாய்த்துறையினர், கட்டுப்பாடு விதிப்பதுடன், அவற்றின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X