கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 08, 2020
Advertisement

மதுரை : 'மதுரை மாவட்டம், பாலமேட்டில், ஜன. 16ல் சுமுகமான முறையில் ஜல்லிக்கட்டு நடப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பாலமேட்டைச் சேர்ந்த சந்தானம் தாக்கல் செய்த பொதுநல மனு:பாலமேடு ஜல்லிக்கட்டின் போது, அனைத்து சமுதாயத்தினருக்கும், விழாக் குழுவினரால் மரியாதை செலுத்தப்படும். இதுவரை, எங்கள் சமுதாய பெரியவர்களுக்கு மரியாதை வழங்கியதில்லை. விழாக்குழு, நிர்வாகக் குழுவில் சேர்ப்பதில்லை. தொடர்ந்து, நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். ஜல்லிக்கட்டில் கிராம சுவாமி மாடுகள் வரிசையில், எங்கள் சமுதாயம் சார்பில், கோவில் மாடு அவிழ்க்கப்படும். விழாவிற்கு நன்கொடை அளிப்பதிலும் எங்கள் பங்களிப்பு இருக்கும்.

பாலமேட்டில், எங்கள் சமுதாய பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில், குழு அமைக்க வேண்டும். உரிய மரியாதை அளிக்கக் கோரி, மதுரை கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்து, 'சுமுகமான முறையில் ஜல்லிக்கட்டு நடத்துவதை, மதுரை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். கலெக்டர், ஆர்.டி.ஓ., வாடிப்பட்டி தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X