பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 6ல் கச்சத்தீவு சர்ச் திருவிழா யாழ்ப்பாணம் பிஷப் அழைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ராமேஸ்வரம் : ''இலங்கை கச்சத்தீவில் மார்ச்6ல் அந்தோணியார் சர்ச் திருவிழா நடக்கிறது'' என யாழ்ப்பாணம் மாவட்ட கலெக்டர் வேதநாயகம் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ.,ல் பாக் ஜலசந்தி கடலில் கச்சத்தீவு உள்ளது. இந்தியா வசம் இருந்த இத்தீவு 1974ல் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.1984ல் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மீனவர்கள் பங்கேற்க அந்நாடு தடை விதித்தது. பின் 2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும், 2010 முதல் கச்சத்தீவு விழாவில் இரு நாட்டு மீனவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

மார்ச் 6ல் கச்சதீவு சர்ச்சில் திருவிழா கொடி ஏற்றப்படுகிறது. அன்றிரவு அந்தோணியார் தேர் பவனி, சிலுவை பாதை பூஜை, சிறப்பு திருப்பலி, மறுநாள் திருவிழா திருப்பலி நடக்கிறது. விழாவிற்கு இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்க யாழ்ப்பாணம் மாவட்ட கலெக்டர் வேதநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.விழாவில் பங்கேற்க மார்ச் 6 காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் விசைப்படகுகளில் பக்தர்கள் கச்சதீவு சென்று மறுநாள் பகல் அங்கிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வருவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X