சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரியில் திடீர் சாலை பள்ளம்

Added : ஜன 08, 2020
Advertisement
 வேளச்சேரியில் திடீர் சாலை பள்ளம்

வேளச்சேரி:கடந்த ஆண்டு, கழிவுநீர் குழாய் பதித்த சாலையில், திடீரென பள்ளம் விழுந்ததால், வேளச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேளச்சேரி, தண்டீஸ்வரம் சாலை, 50 அடி அகலம் கொண்டது. சாலையின் மைய பகுதியில், ராஜ்பவன் கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் இருந்து, பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும், கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.மிகவும் பழுதடைந்த இந்த குழாயை மாற்றி, கடந்த ஆண்டு புதிய குழாய் பதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பள்ளம் தோண்டிய இடத்தில், திடீர் பள்ளம் ஏற்பட்டது.மொத்தம், 4 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பகுதிவாசிகள், அசம்பாவிதம் ஏற்படாத வகையில், எச்சரிக்கை தடுப்பு அமைத்தனர்.பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X