சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 08, 2020
Advertisement

துணிக்கடையில் திருடியவர் கைது

பாண்டி பஜார்: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், பிரபல துணிக்கடை உள்ளது. இங்கு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்ரமணி, 31, என்பவர், 15 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம், தன் பேன்டில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை, மறைத்து வைத்து, திருட முயன்றது தெரிய வந்தது. இது குறித்து, கடையின் மேலாளர் தாஸ் மத்தேயூ, 32, என்பவர், பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ராமசுப்ரமணியத்தை கைது செய்தனர்.

மகளுடன் பெண் மாயம்

அண்ணாசாலை: அண்ணா சாலை, லத்துராம் தெருவைச் சேர்ந்தவர், மோய்ன் இக்பால், 34; கறிக்கடை ஊழியர். இவரது மனைவி லுபானா, 27. இவர், நேற்று முன்தினம் மாலை மூத்த மகள், சைதா, 7, என்பவரை அழைத்து கடைக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது கணவர், அண்ணாசாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பணம் பறித்தோர் சிக்கினர்

ஐ.சி.எப்.: வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலையில் வசிப்பவர், பரகத்துல்லா, 45. இவர், அம்பேத்கர் மற்றும் பாட்டை சாலைகள் சந்திப்பில், டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், மூன்று பேர் கும்பல், இவரது கடைக்கு வந்து, டிபன் சாப்பிட்டனர். அவர்களிடம் சாப்பிட்டதற்கு, பரகத்துல்லா பணம் கேட்டார்.அதை, தர மறுத்த மூவரும், அவரை தாக்கியதுடன், 650 ரூபாயை பறித்து தப்பினர். ஐ.சி.எப்., போலீசார், விசாரித்து, அம்பத்துாரை சேர்ந்த, நெப்போலியன், 21, முருகன், 21, ஆகியோரை கைது செய்தனர். மற்றோருவரை தேடி வருகின்றனர்.

மனைவியை கடத்தியதாக புகார்

கோயம்பேடு: நெற்குன்றம், முனியப்பா நகரைச் சேர்ந்தவர், சிவராஜ், 20. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர், மதுரையில் உள்ள கல்லுாரியில் படித்தபோது, மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்த பாண்டியம்மாள், 19, என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு, பாண்டியம்மாளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 2019 டிசம்பர் மாதம், இருவரும் மதுரை, அழகர் கோவிலில் திருமணம் செய்து, நெற்குன்றத்தில் வசித்து வந்தனர். நேற்று காலை, சிவராஜ் பணிக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டிற்கு வந்த, பாண்டியம்மாள் பெற்றோர், அவரை அடித்து வந்த காரில் அழைத்து சென்றனர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X