சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.25 கோடி மோசடி இரண்டு பேர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை:வங்கி கடன் வாங்கித் தருவதாக, 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணா நகர், திருமங்கலத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவரது நண்பர் கிஷோர். இருவரும், பெங்களூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகி, 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

அதற்கு முன் பணமாக, 1.25 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, அந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி சந்தோஷ் லீவிஸ் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சரவணன் மற்றும் கிஷோர் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X