சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் விழுந்தவரை மீட்க குதித்தவர் மாயம்

Added : ஜன 08, 2020
Advertisement

காசிமேடு:கடலில் விழுந்த மீனவரை மீட்க சென்றவர் மாயமானார்; மற்றொருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

காசிமேடு, சி.ஜி.காலனியைச் சேர்ந்த கண்ணகி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஆனந்த், 51, தலைமையில், சேகர், 55, தியாகு, 41, சங்கர், 49, ஜெயகுமார், 50, ஆகியோர், நேற்று மீன்பிடிக்க சென்றனர்.எண்ணுார் துறைமுகத்தையொட்டிய கடல் பகுதியில், மீன்பிடித்தபோது, படகு ஓட்டுனர் ஆனந்த் நெஞ்சு வலி காரணமாக, நிலை தடுமாறி கடலில் விழுந்தார்.

அவரை மீட்க, சேகர் கடலில் குதித்து ஆனந்தை துாக்கினார். படகில் இருந்த மற்ற மூவரும், ஆனந்தை படகில் ஏற்றி பார்த்தபோது, அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது. ஆனால், சேகர் மாயமானார். மீனவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆனந்த் உடலுடன் காசிமேடு துறைமுகத்திற்கு கரை திரும்பினர்.காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, கடலில் மாயமான சேகரை, இந்திய கடலோர காவல் படை உதவியுடன் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X