அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு சாதகமாக தமிழக அரசு உள்ளதோ? முரசொலி நில விவகாரத்தில், பா.ஜ., சந்தேகம்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

முரசொலி அலுவலக, பஞ்சமி நில விவகாரத்தில், அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்பிக்காமல், தமிழக அரசு அதிகாரிகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என, பா.ஜ., நிர்வாகி தடா பெரியசாமி கூறினார்.

பஞ்சமி நிலத்தில், முரசொலி நாளிதழ் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக, கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இதில் தொடர்புடைய தரப்பினரை, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், விசாரணைக்கு அழைத்து இருந்தது.இதையடுத்து, நேற்று, டில்லி லோக்நாயக் பவனில் உள்ள, இந்த ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளில் ஒருவரான தடா பெரியசாமி வந்திருந்தார்.

தி.மு.க., சார்பில், பெண் வழக்கறிஞர் ஒருவர், தமிழக அரசு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர்.அதிகாரிகளை சந்தித்த பின், தடா பெரியசாமி கூறியதாவது:தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் சென்னை அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கடந்த நவம்பர் 19ல், சென்னையில், விசாரணை நடைபெற்றது.அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, எங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அழைத்து இருந்தது. முரசொலி நாளிதழ் இருக்கும் இடம் சம்பந்தமான ஆவணங்களை, தமிழக அரசும், தி.மு.க., தரப்பும், இன்னும் ஒப்படைக்கவில்லை.

'சென்னையில் உள்ள நிலங்கள் எதையுமே, பஞ்சமி நிலமாக தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கவில்லை' என, தமிழக அரசு கூறுகிறது. ஆனால், இது உண்மைக்கு புறம்பானது. அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அமைந்த, இன்றைய சென்னையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான, 1932 ம் ஆண்டு கெஜட் ஆவணங்களை, ஆணையத்திடம் தந்துள்ளோம். தமிழக அரசு அதிகாரிகள் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு துணை போகிறவர்களாகவே, உள்ளனர். அவர்கள், முரசொலி விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனரோ என்ற ஐயமும் உள்ளது. இவ்வாறு, தடா பெரியசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
08-ஜன-202016:39:41 IST Report Abuse
Baskar உங்கள் ஆட்சி தானே மத்தியில் நடக்கிறது. அங்கெ சொல்லி முளைப்பத்திரத்தை கெழுக்கள். அதற்காக அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-ஜன-202008:40:17 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழக அரசு அதிகாரிகள் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு துணை போகிறவர்களாகவே, உள்ளனர். அவர்கள், முரசொலி விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X