சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய கயவனுக்கு, ' போக்சோ'

Added : ஜன 08, 2020
Advertisement
 சிறுமியை ஆபாசமாக படமெடுத்து  மிரட்டிய கயவனுக்கு, ' போக்சோ'

வண்ணாரப்பேட்டை:சிறுமியை ஆபாச படம் எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை, போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி, தன் மொபைலில் எடுத்த விதவிதமான படங்களை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

சமூக வலைதளம்

இதை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம நபர் ஒருவர், சிறுமியிடம் படங்கள் அழகாக இருப்பதாக உற்சாகப்படுத்தி பேசிய தோடு, சிறுமியின் மொபைல் எண்ணை வாங்கி பேச துவங்கிஉள்ளார்.மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, காதலிப்பதாக தெரிவித்துள்ளார். பின் இருவரும் வெளியில் சென்ற போது, நெருக்கமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இவ்வாறு அடிக்கடி வெளியில் அழைத்து சென்று, தொந்தரவு செய்யவே, பயந்து போன சிறுமி, அவரது தொடர்பை துண்டித்தார்.

பின், அந்த சிறுமியிடம் சேர்ந்து எடுத்த ஆபாச படங்களை, சமூக வலைதளத்தில் வெளியிடுவ தாக கூறி, குடும்பத்தினரிடம், 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.இது குறித்து, பெற்றோர் அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில்,

பட்டதாரியான, விருதுநகர், பல்லம்பட்டியைச் சேர்ந்த ராஜ சிவசுந்தரம், 29, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.சோதனைஅவரிடம் இருந்த, மூன்று மொபைல் போன்கள் மற்றும் லேப்-டாப் பறிமுதல் செய்து நடத்திய சோதனையில், மேலும், 11 பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. 'போக்சோ' சட்டத்தில் ராஜ சிவசுந்தரத்தை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X