பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் புத்தகக்காட்சி நாளை துவக்கம்

Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை:சென்னையில், 43வது புத்தகக்காட்சி நாளை துவங்குகிறது.

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நாளை மாலை, 6:00 மணிக்கு, 43வது சென்னை புத்தகக் காட்சியை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், 13 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடக்கிறது. இதில், 750 அரங்குகளில், கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

மணல் சிற்பம்

ஒரே இடத்தில், அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும். தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாசகர்கள் வருகை தருவர் என்பதால், தினமும் பல்வேறு புத்தக வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ளன.அதேபோல், படைப்பாளர்- வாசகர் சந்திப்புகள், குறும்படம் திரையிடல் உள்ளிட்ட நிகழ்வுகளும் உள்ளன. புத்தகக் காட்சி மைதானத்தில், இன்று, ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், திருவள்ளுவர் உருவத்தை மணல் சிற்பமாக்க உள்ளார்.

கீழடி அகழாய்வு

கண்காட்சி அரங்கில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில், 'கீழடி ஈரடி' என்ற பெயரில், கீழடி அகழாய்வை விளக்கும் அரங்கமும் உள்ளது.மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடந்த ஓவியம், பேச்சு, வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

மைதானத்தில், ஏ.டி.எம்., மையங்கள், தீயணைப்பு, அவசரகால ஊர்திகள் உள்ளன.அரசு வேலை நாட்களில், தினமும் மாலை, 3:00 மணிக்கும், விடுமுறை நாட்களில், தினமும் காலை, 11:00 மணிக்கும் துவங்கும் புத்தகக்காட்சி, தினமும் இரவு, 9:00 மணி வரை நடக்கும். நுழைவுக்க ட்டணம், 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புத்தகக்காட்சியின் நிறைவு நாளான, 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், 25 ஆண்டுகள் பதிப்புத் துறையில் உள்ள பதிப்பாளர்களுக்கு, விருதுகள் வழங்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X