பொது செய்தி

தமிழ்நாடு

'ஒலிம்பியாட்' போட்டியில் சைதன்யா பள்ளி அசத்தல்

Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை:'ஒலிம்பியாட்' அறிவியல் போட்டியில், ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து, ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ்.ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பு:இயற்பியல் ஆசிரியர்களுக்கான இந்திய சங்கமும், அறிவியல் மற்றும் கல்விக்கான ஹோமிபாபா அமைப்பும் இணைந்து, அறிவியல் மற்றும் விண்வெளியியல் தொடர்பான ஒலிம்பியாட் போட்டி நடத்தியது.

இதில், ஸ்ரீ சைதன்யா பள்ளிகளைச் சேர்ந்த, 171 மாணவர்கள், அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள், இந்த மாதம் நடக்கவுள்ள, இந்திய தேசிய ஒலிம்பியாட் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில், வேறு எந்த கல்வி நிறுவனங்களின் மாணவர்களும், இந்த போட்டியில், சைதன்யா பள்ளி மாணவர்கள் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை.

சைதன்யா பள்ளியில் மட்டுமே, தொழில்நுட்ப ரீதியாக மாணவர்களை, அறிவியலில் சிறந்து விளங்கும் வகையில் கற்றுத் தரப்படுகிறது. அதற்கு ஏற்ற பாட திட்டமும், கற்பித்தல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X