பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு 30 ஆயிரம் பஸ்கள் இயக்கம் ; சிறப்பு முன்பதிவு மையம் நாளை துவக்கம்

Added : ஜன 08, 2020
Advertisement
 பொங்கலுக்கு 30 ஆயிரம் பஸ்கள் இயக்கம் ;   சிறப்பு முன்பதிவு மையம் நாளை துவக்கம்

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து, 30 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை பல்லவன் இல்லத்தில், நேற்று ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்து துறை செயலர் சந்திரமோகன், சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஜெயகவுரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.அதன்பின், அமைச்சர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், வரும், 12 முதல், 14ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, வரும், 16 முதல், 19ம் தேதி வரை, தொழில் நகரங்களுக்கு திரும்பும் வகையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும், 2,225 பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களை சேர்த்து, மூன்று நாட்களுக்கு, 16 ஆயிரத்து, 75 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களில் இருந்தும், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக, மொத்தம், 30 ஆயிரத்து, 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதில், சென்னை, திருப்பூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை, தேனி, நெல்லை ஆகிய நகரங்களில் இருந்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கு வசதியாகவும், சென்னை மாநகரில் நெரிசலை தவிர்க்கும் வகையிலும், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலைம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் மாதவரம் புதிய பஸ் நிலையங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்படும்.எங்கிருந்து எங்கு? ஆந்திரா செல்லும் பஸ்கள், மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் கும்பகோணம், தஞ்சை, விக்கிரவாண்டி வழியாக செல்லும் பஸ்கள், பண்ருட்டி செல்லும் பஸ்கள், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பபடும்

தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்திலிருந்து, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, பண்ருட்டி செல்லும் பஸ்கள், செஞ்சி வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, நெய்வேலி, வடலுார், காட்டுமன்னார் கோவில், புதுச்சேரி செல்லும் பஸ்கள் இயக்கப்படும் வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்களும், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.முன்பதிவு செய்த பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி, நாசரத்பேட்டை, புறவழிச் சாலை வழியாக, வண்டலுார் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் செல்லும்.

அவை, தாம்பரம், பெருங்களத்துார் பஸ் நிலையங்களில் நிற்காது. அங்கிருந்து பயணிக்கும் வகையில். முன்பதிவு செய்தோர், ஊரப்பாக்கம் பஸ் நிலையம் சென்று பயணிக்கலாம்.முன் பதிவு மையங்கள்:நாளை முதல், சென்னையில், சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில், 15; தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையம் மற்றும் பூந்தமல்லி பஸ் நிலையம், தலா, ஒன்று என, மொத்தம், 17 முன்பதிவு மையங்கள், 14ம் தேதி வரை செயல்படும்.பஸ்களின் இயக்கம் குறித்த சந்தேககங்களுக்கு, 94450 14450, 94450 14436 ஆகிய, மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பயணியருக்கு உதவும் வகையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில், 24 மணி நேர உதவி மையமும் செயல்படும்.பயணியருக்கு தேவையான அளவில், எல்லா வசதிகளையும் உடைய, அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதனால், யாரும் அதிக கட்டணம் செலுத்தி, ஆம்னி பஸ்களில் பயணிக்க வேண்டாம். அவ்வாறு, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 4256151 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். கடந்த ஆண்டு பொங்கலுக்கு, அரசு பஸ்களில், ஏழு லட்சம் பேர் பயணித்தனர். இந்த ஆண்டு, கூடுதல் விடுமுறை நாட்கள் வருவதால், எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X