சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் காயங்களுடன் கிடந்த ஆண், பெண்ணால் பரபரப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

வடபழநி:தனியார் ஓட்டலில், ரத்த காயங்களுடன் கிடந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சையது அபுபக்கர், 36; தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் அலுவலக வேலை விஷயமாக சென்னை வந்தார்.வடபழநி, 100 அடி சாலையில் உள்ள ஓட்டலில் தங்கினார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின், சென்னை கிளையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், சையது அபுபக்கர் தங்கி இருந்த அறைக்கு, சிறிது நேரத்தில் சென்றார். இரவு, 11:00 மணிஅளவில், அந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

இதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள், அங்கு சென்று பார்த்தனர். சையது அபுபக்கர் மற்றும் அப்பெண், கையில் வெட்டு காயங்களுடன், கழிப்பறைக்குள் அரைகுறை ஆடையுடன் கிடந்தனர்.மேலும், அங்கிருந்த கை கழுவும், 'வாஷ் பேசின்' உடைந்து கிடந்தது. இதையடுத்து, அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X