பொது செய்தி

இந்தியா

ரயில்வே பாதுகாப்பு படை பெண்கள் பங்களிப்பில் முதலிடம்

Added : ஜன 08, 2020
Advertisement

புதுடில்லி : துணை ராணுவ படைப் பிரிவுகளில், ரயில்வே பாதுகாப்பு படையில் தான், பெண்களின் பங்கு, 10 சதவீதம் என்ற அளவிற்கு அதிகமாக உள்ளது.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு படையில், 80 ஆயிரம் பேர் உள்ளனர். அதில், எட்டாயிரம் பேர் பெண்கள்.துணை ராணுவப் படைப் பிரிவில், ரயில்வே பாதுகாப்பு படையில் தான், பெண்களின் பங்கு, அதிகபட்சமாக, 10 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.தற்போது, ரயில்வே படைப் பிரிவில் காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கு, 1,121 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், 298 பேர் பெண்கள். 929 பேருக்கு பயிற்சி துவங்கியுள்ளது.காவலர்கள் பதவிக்கு, 8 ஆயிரத்து,543 பேர் தேர்வாகியுள்ளனர்.

அதில், 4 ஆயிரத்து,78 பேர் பெண்கள். தேர்வானோரில், 5,850 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, ஆகியவற்றில், பெண்களின் பங்கு, முறையே, 5,55 ; 2.64 ; 2.50 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் 'சசாஷ்ட்ரா சீமா பல்' ஆகியவற்றில், முறையே, 2.12 மற்றும் 1.85 சதவீத பெண்கள் பணியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X