பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement


திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மாணவ- - மாணவியர் இடையே நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று, நடப்பாண்டிற்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி, திருத்தணியில் நடந்தது.இதில், கெங்குசாமி மேல்நிலைப் பள்ளி, தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து, மொத்தம், 33 மாணவ- - மாணவியர் பங்கேற்றனர். இதில், முதல் மூன்று இடங்கள் பிடித்த, 20 மாணவ- - மாணவியருக்கு, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X