சிண்டு முடிக்க முடியாது! | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிண்டு முடிக்க முடியாது!

Added : ஜன 08, 2020

சென்னை : ''எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சிண்டு முடிக்க நினைப்பது நடக்காது,'' என, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: பாராட்டு கூட்டத்தில் பேசுவது போல், அரசின் சாதனைகளையும், முதல்வரின் நடவடிக்கைகளையும் புகழ்ந்து, எம்.எல்.ஏ., செம்மலை நீண்ட நேரம் பேசினார்.

செம்மலை இப்படி முதல்வரை புகழ்ந்ததை நான் பாராட்டவில்லை. செம்மலையை இப்படி புகழ வைத்துவிட்டாரே என்று, முதல்வரை பாராட்டுகிறேன். முதல்வர் சாமர்த்தியமானவர் தான்.துணை முதல்வர் பன்னீர்செல்வம்: சிண்டு முடிக்கும் வேலையை எதிர்கட்சி துணைத் தலைவர் சரியாக செய்கிறார். அதற்கு நான், இடம் கொடுக்க மாட்டேன்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X