பொது செய்தி

தமிழ்நாடு

அவனி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்: போராட்டமும் தொடருகிறது

Added : ஜன 08, 2020
Advertisement


அவனியாபுரம், அவனியாபுரத்தில் பொங்கலையொட்டி ஜன., 15 ஜல்லிக்கட்டு நடந்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும் நிலையில் மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டங்கள் தொடருகின்றன.இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதில் இரு தரப்பினருக்குள் போட்டி நிலவுகிறது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. கலெக்டர் வினய் அமைத்த கமிட்டிக்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமையும் இடத்தில் தடுப்புகள் அமைக்க சவுக்கு மரங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இறக்கப்படுகின்றன. இன்று (ஜன., 8) காலை முகூர்த்தகால் ஊன்றப் படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டிக்கு அனுமதி வழங்க கோரி பஸ் ஸ்டாண்டில் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவர்கள் கூறியதாவது: கலெக்டர் அறிவிப்பை ஏற்க முடியாது. நுாறாண்டுளாக ஜல்லிக்கட்டு ஆலோசனை, நிர்வாகிகள் தேர்வு ஈஸ்வரன் கோயிலில் தான் நடக்கும். தற்போது அமைச்சரின் துணையுடன் அவர்களாகவே குழுவை அறிவித்துள்ளனர் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X