சிறு, குறு விவசாயி சான்றுகள் சேவை மையங்களில் கிடைக்காதா?

Added : ஜன 08, 2020
Share
Advertisement

வாலாஜாபாத்:கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களில், சிறு, குறு விவசாயி சான்று பெற முடியவில்லை என, விவசாயிகளிடையே புகார் எழுந்துள்ளது.


வேளாண் கடன் சங்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 140க்கும் மேற்பட்ட கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இயங்குகின்றன.இங்கு, விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் விற்பனை செய்வதோடு, வருவாய் துறை சான்று அளிக்கும், கணினி சேவை மையங்களும் துவக்கப்பட்டு உள்ளன.கிராம மக்களும், ஜாதி, இருப்பிடம், வருவாய், வாரிசு உரிமை, முதல் பட்டதாரி உள்ளிட்ட பல அரசு சான்றுகளை, இம்மையங்களில் பெற்று வந்தனர்.

அந்த வரிசையில், சிறு, குறு விவசாயி சான்றும் பெறலாம் என, வருவாய் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.ஆனால், கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் இயங்கும் இ - சேவை மையங்களில், சிறு, குறு விவசாயி சான்று கேட்டு விண்ணப்பித்தால், சான்றுகள் கிடைப்பதில்லை என, விவசாயிகளிடையே புகார் எழுந்துள்ளது.


சேவை மையம்

இது குறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத விவசாயி ஒருவர் கூறியதாவது:தாலுகா அலுவலகங்களில் இயங்கும் இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால் மட்டுமே, சான்றுகள் கிடைக்கின்றன.பிற கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்க கணினி மையத்தில் விண்ணப்பித்தால், சிறு, குறு விவசாய சான்று கிடைப்பது இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த குறையை போக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X