சுற்றுலா வாகனங்களால் காஞ்சிபுரத்தில் நெரிசல்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள், பிரதான சாலையோரம் நிறுத்தப்படுவதால், நகரில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் துவங்கியுள்ளது.இதனால், ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும், செவ்வாடை மற்றும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவில்களின் அருகில், போதுமான, 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சுற்றுலா வாகனங்களை, நகரில் உள்ள பிரதான சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர்.இதனால், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களால், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் நெரிசல் ஏற்படுகிறது.அதேபோல், காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களால், செங்கழுநீரோடை வீதியிலும், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சர்வ தீர்த்தகுளம் எதிரே, நடைபாதை வசதியுடன், 200 கார், 70 பஸ், 120 வேன்கள் நிறுத்துவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டு வரும், பார்க்கிங் அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X