பொது செய்தி

தமிழ்நாடு

வல்லக்கோட்டை கோவில் அருகே பக்தர்கள் தங்கும் விடுதி தேவை

Added : ஜன 08, 2020
Advertisement

வல்லக்கோட்டை:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 7 அடி உயரத்தில், நின்ற கோலத்தில், முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, ஆடி கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் சென்று வழிபடுகின்றனர்.

இந்நிலையில், இந்த கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி இல்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் அருகே உள்ள நுாலகம் கட்டடம், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் ஆகிய இடங்களில் தங்கி அவதிப்படுகின்றனர்.மேலும், தனியார் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில், அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:கோவில் அருகே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி, புதர்மண்டி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, இலவச தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X