சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை

Added : ஜன 08, 2020
Advertisement
 காலில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை

கடலுார்:காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி பகுதியில் இரண்டு மயில்கள் சண்டை போட்டுக்கொண்டதில் பெண் மயிலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் மயிலை மீட்டு அருகில் உள்ள ரெட்டிச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் உயிரின ஆர்வலர் கடலுார் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர். மயிலை பெற்ற செல்லா, சண்டை கோழி வளர்ப்பவர்களின் ஆலோசனையின்படி, அபிேஷகப்பாக்கத்திற்கு கொண்டு சென்று, மாவு கட்டு போட்டார். விரைவில் குணமடைய, கால்நடை மருத்துவமனையில் அலோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயில் செல்லாவின் பாதுகாப்பில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X