போடப்பட்ட சாலையில் மீண்டும் பணி வீணாகும் அரசு பணம்

Added : ஜன 08, 2020
Advertisement
 போடப்பட்ட சாலையில் மீண்டும் பணி வீணாகும் அரசு பணம்

நாயக்கன்குப்பம்:ஏற்கனவே போடப்பட்ட சிமென்ட் சாலை மீது, புதிய சிமென்ட் சாலை போடுவதால், அரசு பணம் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்குப்பம் ஊராட்சி, ரெட்டியார் தெருவில், 100 மீட்டர் சிமென்ட் சாலை, 100 மீட்டர், 'பேவர் பிளாக்' சாலை உள்ளன. சில மீட்டருக்கு, சிமென்ட் சாலை வசதி இல்லை.இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றிய பொது நிதி, 6.80 லட்சம் ரூபாயில், 150 மீட்டரில் புதிய சாலை போடுவதற்கு, ஒன்றிய நிர்வாகம், சமீபத்தில் ஒப்பந்தம் விடுத்தது.ஒப்பந்தம் எடுத்த ஆளுங்கட்சி பிரமுகர், ஏற்கனவே போடப்பட்ட சிமென்ட் சாலையை சேதப்படுத்தி, அதே இடத்தில் புதிய சாலை போடுகிறார். இதனால், அரசு பணம் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது: சிமென்ட் சாலை இல்லாத இடத்தில், புதிய சாலை போடுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.ஏற்கனவே இருக்கும் சாலையில், புதிய சிமென்ட் சாலை போடப்படுவதாக புகார் வந்ததால், பணியை நிறுத்தும்படி, ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மீறி செய்தால், அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை விடுவிக்க முடியாது. இத்துறை பொறியாளர், சாலை போடும் பகுதியில் ஆய்வு செய்ய உள்ளார்இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X