மூடியே இருக்கும் காவல் நிலையம்| Dinamalar

மூடியே இருக்கும் காவல் நிலையம்

Added : ஜன 08, 2020
 மூடியே இருக்கும் காவல் நிலையம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, போலீசாரை நியமிக்காததால், மூடியே காணப்படுகிறது.

மாமல்லபுரம், போலீஸ் துணை கோட்ட பகுதியில், மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உட்பட பல இடங்களில், காவல் நிலையங்கள் இயங்குகின்றன.


ஏமாற்றம்



இப்பகுதி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மாமல்லபுரத்தில் இயங்குகிறது. இந்நிலையத்திற்கு, சில ஆண்டுகளாக, போலீசார் நியமிக்கப்படாமல் உள்ளது.போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர், மூன்று தலைமைக் காவலர்கள், 10 போலீசார் என, 15 பேர் பணியிடம் இருக்கிறது.ஆனால், சில ஆண்டுகளாகவே, இன்ஸ்., - சப் - இன்ஸ்., மட்டுமே, பணியில் உள்ளனர். 13 பேர் நியமிக்கப்படவில்லை.

வழக்கு விசாரணைக்கு செல்வது, பிற பணிகள் என, மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளை, இருவரே செய்கின்றனர். அவ்வப்போது வெளியே செல்வதால், நிலையத்தை நிர்வகிக்க இயலாமல் மூடப்படுகிறது.இதனால், புகார் அளிக்க, தொலைவிலிருந்து வருவோர், பூட்டியே காணப்படும் நிலையத்தை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.


பாதுகாப்பு



தற்போது, சுற்றுலாப் பயணியர் குவியும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு அவசியத்திற்கு, பெண் போலீசார் அவசியம்.செங்கல்பட்டு மாவட்டத்தில், சுற்றுலா முக்கியத்துவ பகுதியான மாமல்லபுரத்தில், கூடுதல் போலீசார் நியமித்து, இந்நிலையத்தை இயக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X