விண்வெளியில் புதிய கிரகம் பூமிக்கு அருகில் கண்டுபிடிப்பு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (9)
Advertisement
விண்வெளியில் புதிய கிரகம் பூமிக்கு அருகில் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த, 2018ல், நாசா, 'டெஸ்' என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் செல்கின்றனவா என்பதையும், அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்வது தான், இதன் வேலை.

இந்த ஆய்வில், பூமியில் இருந்து, 100 ஒளி ஆண்டுகள் துாரத்தில், ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'டி.ஓ.ஐ.,700டி' என, விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது, பூமியை விட, 20 சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தை, 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

சூரியனிடம் இருந்து, பூமி பெறும் வெப்பத்தில், 86 சதவீதத்தை, புதிய கோள் பெறுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங்கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின், மூன்று மாதிரிகளை உருவாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக் கோள், 'டி.ஓ.ஐ., 700 பி, சி, டி.,' என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது. இதில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்தான், பூமிக்கு நெருக்கமான அம்சங்களுடன் உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shoba -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202011:36:49 IST Report Abuse
shoba useless discoveries...waste of time, effort, money with more lies
Rate this:
Share this comment
Cancel
R Elangovan - Thiruvarur,இந்தியா
08-ஜன-202010:49:31 IST Report Abuse
R Elangovan //பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகத்தில் வீட்டு மனைப் பட்டாக்கள். சதுர அடி ரூ 100 மட்டுமே. அருகிலேயே பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில், சர்ச், மசூதி எல்லாம் வரப்போகுது. கூடவே எல்லோருக்கும் வீடு திட்ட சலுகைகளும் உண்டு. தொடர்பு கொள்க கப்சா ரியல் எஸ்டேட், சென்னை. செல் 111999222 // என்று சொன்ன அடுத்த நிமிடமே எல்லா இடமும் (online sale ) வித்து காசாகிட்டோம் இனி போன் wrong நம்பருன்னுதான் சொல்லும். இதானால் பணத்தை கொடுத்து ஏமாந்த பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப வாங்கித்தர வேண்டி மறியல் செய்தனர் இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது, ( ,,,,,,,,,,,,,,.,டிவி க்காக பூமியிலிருந்து எமது செய்தியாளர்)
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
08-ஜன-202010:08:02 IST Report Abuse
suresh kumar //100 ஒளி ஆண்டுகள் துாரத்தில்....// மனிதன் இந்த தூரத்தை கடந்து செல்ல எத்தனை ஆண்டுகள் ஆகும்?
Rate this:
Share this comment
Gokul - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-202009:33:44 IST Report Abuse
Gokulஒளி வேகத்தில் சென்றால் 100 ஆண்டுகள் ஆகும். ஒளி வேகத்தில் இது வரை யாருமே செல்ல முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X