பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகங்களை ஆசிரியர்களே சுமப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி குமுறல்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
வேடசந்துார் :தமிழக அரசு வழங்கும் இலவச புத்தகங்களை, பள்ளிகளில் கொண்டுவந்து கொடுக்காமல், தங்களிடமே வழங்குவதால் சுமந்து சிரமப்படுவதாக ஆசிரியர்களிடையே குமுறல் எழுந்துள்ளது.தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், நோட்டுகள், சீருடை. காலணி, சத்துணவு உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாடப் புத்தகங்களின் சுமைகளை குறைக்கும் விதமாக, முதல்

வேடசந்துார் :தமிழக அரசு வழங்கும் இலவச புத்தகங்களை, பள்ளிகளில் கொண்டுவந்து கொடுக்காமல், தங்களிடமே வழங்குவதால் சுமந்து சிரமப்படுவதாக ஆசிரியர்களிடையே குமுறல் எழுந்துள்ளது.தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், நோட்டுகள், சீருடை. காலணி, சத்துணவு உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாடப் புத்தகங்களின் சுமைகளை குறைக்கும் விதமாக, முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவமென பாடப் புத்தகங்களை பிரித்து வழங்குகிறது.தற்போது, மூன்றாவது பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. இந்த புத்தகங்களை, வேடசந்துார் வட்டார கல்வி அலுவலகம் சார்பில், அந்தந்த பள்ளி ஆசிரியர்களை நேற்று வரவழைத்து வழங்கினர். அவர்களும் வந்து புத்தகங்களை பெற்றுச் சென் றனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கோபிநாதன் கூறியதாவது: பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கே வாகனங்களில் கொண்டு சென்று, எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பிரித்து வழங்கும் விதமாக அரசு நிதி வழங்குகிறது. ஆனால், வேடசந்துாரில் அதைப்பற்றி கவலைப்படாமல், தலைமை ஆசிரியர்களை தனித்தனியாக வரவழைத்து புத்தகங்களை கொடுத்து அனுப்புகின்றனர். வரும் காலங்களிலாவது, புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு வந்து வழங்கவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X