பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டணி கட்சிக்குள் உள்குத்தை விமர்சித்த தே.மு.தி.க., நிர்வாகி

Added : ஜன 08, 2020
Advertisement

கொடைக்கானல், :'கொடைக்கானலில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் உள்குத்தில் இறங்கியதே தோல்விக்கு காரணம்' என, தே.மு.தி.க., வேட்பாளார் குற்றசாட்டியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வுக்கு வில்பட்டி 3 வது வார்டு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் மகேந்திரன் போட்டியிட்டார். அப்பகுதியில் அ.தி.மு.க.,வுக்குள் எழுந்த உட்கட்சி பூசலால் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு 'சீட்' மறுக்கப்பட்டு தே.மு.தி.க., வசம் போனது. இதனால் அ.தி.மு.க.,வின் முத்துக்கிருஷ்ணன் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற் றார். எனவே, 'தனது தோல்விக்கு வில்பட்டி அ.தி.மு.க., நிர்வாகிகளே காரணம்' என தே.மு.தி.க., வேட்பாளார் முகநுாலில் பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றி பெற்றவர் குறித்து விமர்சித்தும், பா.ஜ., வின் உள்குத்தால் தி.மு.க., மாபெரும் வெற்றி எனவும் சர்ச்சை கிளம்பியதால் அ.தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இக்கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் காரசாரமான வாதங்களுடன் சமூகவலைத் தளங்களில் பதிவேற்றங்கள் அரங்கேறின. கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலையில் அ.தி.மு.க., படுதோல்வியடைந்துள்ளதால் ஒன்றிய செயலாளர்கள் குறித்து தலைமைக்கு புகார் தயாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X