பொது செய்தி

தமிழ்நாடு

உணவுப்பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க யோசனை

Added : ஜன 08, 2020
Advertisement

திண்டுக்கல் :'திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நடந்த, கருத்தரங்கில் விவசாயிகள் உணவுப்பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என, பொருளியல் வல்லுனர்கள் கூறினர் திண்டுக்கல் சின்னாளப்பட்டி காந்திகிராம பல்கலை பொருளியல் துறை சார்பில், 'பொருளாதரத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், விவசாயத்தின் செயல்திறன்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. துறைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

பேராசிரியர்கள் புதுச்சேரி ராமச்சந்திரன், மும்பை ரஜினிமுத்தாய் பேசினர்.விவசாயத்தின் சிக்கலுக்கு தொழில்நுட்பம் பின்தங்கிய நிலை, பருவமழை, சரியான நீர்ப்பாசன முறை இல்லா தது, சரியான நேரத்தில் கடன் கிடைக்காதது போன்றவை காரணமாகும். விவசாய வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு கொள்கைகள், திட்டங்கள் உருவாக்க வேண்டும். சிறு நீர்ப்பாசன முறையை ஊக்கப்படுத்தலாம். உணவு தானியங்களின் உற்பத்தி, பழங்கள், காய்கறிகளைவிட குறைவாக உள்ளன. ஊட்டச்சத்து மேம்படவும், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உணவுப்பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பது அவசியம் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X