தமிழ்நாடு

இன்று வேலை நிறுத்த போராட்டம் : தொழிலாளர்களுக்கு போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

Added : ஜன 08, 2020
Advertisement

திண்டுக்கல் 'வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்பு' குறித்து போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல், தேனியில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள் ளது. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜன.8) அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வருவாய்த்துறையினர் சங்கம் பங்கேற்கின்றனர். இன்று போக்குவரத்து கழகத்தின் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனைகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.விழிப்புணர்வு பேனர்அதில், 'தொழிலாளர்கள் ஒரு நாள் பணிக்கு வராமல் இருந்தால் அடிப்படை சம்பளம் ரூ.20 ஆயிரத்து 700. ஒரு நாள் சம்பளம் ரூ.846. ரீவியூ 3 மாதம் தள்ளி வைக்கப்படுவதால் ஊதியம் மற்றும் அகவிலைப்படி இழப்பு 3 மாதத்திற்கு ரூ.3 ஆயிரத்து 633, பணிக்கொடை இழப்பு ஒரு வருடத்திற்கு (குறைந்தபட்சம் 240 வருகைப்பதிவு இல்லாமை) ரூ.13 ஆயிரத்து 972, ஒரு நாள் ஆப்சென்ட் ஆவதால் பணியாளர் சர்வீஸ் மீதம் 20 ஆண்டு இருப்பின் இழப்பு ரூ.72 ஆயிரத்து 660, 5 ஆண்டு இருப்பின் இழப்பு ரூ.18 ஆயிரத்து 165 ஏற்படும்.ஊதிய மறுநிர்ணய ஆய்வு தேதி ஒத்தி வைப்பு, சீனியாரிட்டி பாதிப்பு, வெயிட்டேஜில் ஒரு நாள் சம்பள பாதிப்பு ஏற்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேனர் திண்டுக்கல், தேனி பணி மனைகளில் கட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X