சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடையின், 8வது மாடியில் உள்ள, 'எஸ்கலேட்டரில்' 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.புளியந்தோப்பு, கண்ணிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மனைவி சசிகலா. இவர் நேற்று தனது மகன் ரணிஷ் பாபுவை, 13, புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடைக்கு சென்றார்.கடையில் ஏழாவது மாடியில் இருந்து, எட்டாவது மாடிக்கு, நகரும் படிக்கட்டு எனும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

எஸ்கலேட்டர், எட்டாவது மாடியை சென்றடைவதற்கு முன், ரப்பர் பெல்ட்டுக்கும், சுவருக்கும் இடையில் உள்ள, சிறிய இடைவெளியில், சிறுவனின் தலை சிக்கியது.அப்போது, சிறுவன் வலியால் அலறினார். சசிகலா கூச்சல் போட்டார். அப்போது கடையின் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, மின் இணைப்பை துண்டித்து நிறுத்தினர். மேலும், சிறுவனை, லாவகமாக காப்பாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202015:04:40 IST Report Abuse
SELF பிரபலமான ஸ்டோர் இன்று எழுதுகிறீர்கள். சரவணா ஸ்டோர் தான் அது என்று மக்களுக்கு தெரியும். எல்லாம் பணபலம் உள்ளவர்கள் எல்லாவற்றையும் சரி கட்டி விடுவார்கள். வரி ஏய்ப்பு செய்து அரசு அதிகாரிகளை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். பணக்காரர்களுக்கு எல்லாம் ஒரு நியாயம். ரயில் நிலையங்களில் பூவிற்கும் ஏழை பாழைகளை போலீசார் பிடித்து ஆயிரம் 2000 என்று பைன் போடுகிறார்கள். கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கிறவர்களுக்கு ராஜ உபசாரம். இதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகம்.
Rate this:
Share this comment
man - ,
08-ஜன-202019:11:23 IST Report Abuse
manSUPER AND CORRECT ANSWER BRO...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X