எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (2)

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடையின், 8வது மாடியில் உள்ள, 'எஸ்கலேட்டரில்' 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.புளியந்தோப்பு, கண்ணிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மனைவி சசிகலா. இவர் நேற்று தனது மகன் ரணிஷ் பாபுவை, 13, புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடைக்கு சென்றார்.கடையில் ஏழாவது மாடியில் இருந்து, எட்டாவது மாடிக்கு, நகரும் படிக்கட்டு எனும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

எஸ்கலேட்டர், எட்டாவது மாடியை சென்றடைவதற்கு முன், ரப்பர் பெல்ட்டுக்கும், சுவருக்கும் இடையில் உள்ள, சிறிய இடைவெளியில், சிறுவனின் தலை சிக்கியது.அப்போது, சிறுவன் வலியால் அலறினார். சசிகலா கூச்சல் போட்டார். அப்போது கடையின் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, மின் இணைப்பை துண்டித்து நிறுத்தினர். மேலும், சிறுவனை, லாவகமாக காப்பாற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X