திண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மற்றும் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரியில் லீக் போட்டி நடந்தது. இரண்டாவது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் எரியோடு ஸ்கீல் அணி 24 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 23 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களுக்கு வெற்றி பெற்றது.
விஜய் 30 ரன், ராமசந்திரன் 3 விக்கெட் எடுத்தனர். மற்ற போட்டிகளில் வேடசந்துார் சீனிபாலா அணி 22 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஜெயவீரபாண்டியன் 104 ரன் நாட் அவுட். திண்டுக்கல் காட்ஷன் அணி 18.3 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.காந்திகிராம் அணி 21.4 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நோவல் விஜய் 40 ரன், புகழேந்திரன் 4 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் வெற்றி அணி 17.3 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. மூன்றாவது டிவிஷன்ஓட்டல் பார்ஷன் கோர்ட் டிராபி போட்டியில் கொடைரோடு கொடை அணி 23 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. பிரகதி 36 ரன், பாலாஜி, ராஜா மற்றும் சந்திரன் தலா 3 விக்கெட் எடுத்தனர். நல்லாம்பட்டி யங் ஸ்டார் அணி 19.5 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.பாப்பம்பட்டி ஏய்ம் ஸ்டார் அணி 18.1 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் ஹரிவர்ணா அணி 20.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களுக்கு வெற்றி பெற்றது.* நான்காவது டிவிஷன்ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் டிராபி போட்டியில் திண்டுக்கல் மெஜஸ்டிக் 22 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. பழநி சுப்ரமணியா அணி 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களுக்கு வெற்றி பெற்றது. வீரமலை 35 நாட் அவுட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X