சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் இந்தியன் வங்கி வராக்கடன் வசூலிப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

நத்தம்நத்தம் பகுதியில் இந்தியன் வங்கி சார்பில் வராக்கடன் வசூலிப்பு இயக்கம் நடந்தது.தமிழக அளவில் ஜன.3 முதல் 8 ம் தேதி வரை வராக்கடன் வசூலிப்பு இயக்கம் நடத்தும்படி இந்தியன் வங்கியின் சென்னை தலைமை அலுவலகம் அறிவுறுத்தியது. இதன்படி நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்தியன் வங்கி கிளை சார்பில் வராக்கடன் வசூலிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. காலை முதல் மாலை வரை வீடு வீடாக சென்று கடன் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வங்கி அலுவலர்கள் வசூலிப்பில் ஈடுபட்டனர். நேரில் சென்ற போது செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வங்கி கிளைக்கு வந்து செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மணிஷ் பர்மார், ஜெகநாத ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X