தமிழ்நாடு

விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வேறொரு நபருக்கு செல்வதாக புகார்

Added : ஜன 08, 2020
Advertisement

வேடசந்துார், மத்திய அரசின் விவசாயிகள் ஊக்கத்தொகை, தனது வங்கி கணக்கிற்கு வராமல் வேறு மாநிலத்தவரின் வங்கி கணக்கிற்கு செல்வதாக, விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.வேடசந்துார் ஒன்றியம் இ.சித்துார் கிராமம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி கந்தசாமி,85. இவர் மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தில் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பித்து தகுதி பெற்று இருந்தார்.இதற்காக வங்கி கணக்கு எண், விவசாய ஆவணங்களை வழங்கியதால் அதற்கு தகுதியும் பெற்று இருந்தார். அவருடன் விண்ணப்பித்தோருக்கு பணம் வந்தது. இவருக்கு கிடைக்காததால், இணையதளத்தில் விவரங்களை தேடினார். இதில் கந்தசாமியின் வங்கி கணக்கு எண்ணை அதிகாரிகள் தவறுதலாக பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதனால் இவருக்கு சேரவேண்டிய தொகை ராஜஸ்தான் மாநிலம் மும்தாகுமாரி என்பவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கந்தசாமியின் மகன் சண்முககுமார் கூறியதாவது: எனது தந்தை கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கு எண் 3315108001702. அதற்கு பதிலாக 381515108001702 என தவறுதலாக பதிவு செய்துவிட்டதால், எங்களுக்கு வரவேண்டிய ஊக்கத்தொகை, ராஜஸ்தான் மாநிலம் மும்தாகுமாரி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் உதவ வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X