தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பிரியாணி ஊராட்சி தலைவரின் நன்றி நன்றி தெரிவித்த ஊராட்சி தலைவர்

Added : ஜன 08, 2020
Advertisement


வடமதுரை, கொம்பேறிபட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக ஊராட்சி தலைவர் மக்களுக்கு விருந்து கொடுத்தார்.வடமதுரை ஒன்றியத்தில் மிக அதிகபட்சமாக 1,870 ஓட்டுகள் வித்தியாசமாக கொம்பேறிபட்டி ஊராட்சி தலைவராக ராஜரத்தினம் வெற்றி பெற்றார். இங்கு கடந்த 2001ல் தலைவராக இருந்தவர் ராஜரத்தினம். இதற்கு முன்னர் இவரது தந்தை மாணிக்கம் 20 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். காங்.,வட்டார தலைவராக இருக்கும் ராஜரத்தினம் கடந்த 2011 தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.இம்முறை நடந்த தேர்தலில் ஒன்றியத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதனையடுத்து கொம்பேறிபட்டியில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தற்போது தேர்தல் நன்னடத்தை காலம் முடிவுற்றதால், இவர்கள் அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் 'வெஜிடபுள்' பிரியாணி விருந்து வழங்கி, நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X