சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Added : ஜன 08, 2020
Advertisement

கிள்ளை:பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பெண் இறந்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 23; கட்டட தொழிலாளி. இவரும், பெரியகுமட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளியான சூரியகாந்தியும், 46; நேற்று முன்தினம் சிதம்பரத்திற்கு கட்டட வேலைக்கு பைக்கில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.கிள்ளை அடுத்த மண்டபம் அருகே, ஸ்பீடு பிரேக்கில் பைக் ஏறி இறங்குபோது, பின்னால் உட்கார்ந்து வந்த சூரியகாந்தி, கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X