பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு வார்டுகளில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில், 4 வார்டுகளுக்கான மறு ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
கடலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. கடந்த 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. வெற்றி பெற்றவர்கள் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, கடலுார் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஆட்சேபனையில் அடிப்படையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கை எண் 20ல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி, சம்பந்தப்பட்ட பதவியிடங்களுக்கான ஓட்டு சீட்டுக்கள், தனியாக பிரித்தெடுத்து மூடி முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த நான்கு வார்டுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வார்டு எண் 1ல் கோரணப்பட்டு சிற்றுாராட்சி உறுப்பினர், குமராட்சி ஒன்றியம், வெள்ளூர் சிற்றுாராட்சி வார்டு எண் 5, மேல்புவனகிரி ஆணைவாரி சிற்றுாராட்சி வார்டு எண் 3, கீரப்பாளையம் சி.சாத்தமங்கலம் சிற்றுாராட்சித் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கை படி மேற்காணும் பதவியிடங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (8ம் தேதி) அன்று காலை 9.30 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், தொடர்புடைய வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறும்.வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இம் மாதம் 10ம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்ளலாம். அவர்கள் 11ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ள கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X