எரியாத தெருவிளக்குகள் இருளில் தவிக்கும் மக்கள்

Added : ஜன 08, 2020
Advertisement

சின்னமனுார் :சின்னமனுார் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளில் 30 சதவீதம் பராமரிப்பின்றி எரியாததால், முக்கிய பகுதிகள் இருளில் மூழ்குகின்றன.இந்த நகராட்சியின் தெருவிளக்கு பராமரிப்பு தனியாரிடம் இருந்தது. பழுதடைந்தவற்றை மாற்றுவதில் தனியார் மெத்தனமாக செயல்பட்டதால் பிரச்னை எழுந்தது. தனியார் ஒப்பந்தம் கடந்த மாதம் 7 ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது பராமரிப்பு பணிகளை நகராட்சி மேற்கொள்கிறது. ஊழியர் பற்றாக்குறையால் இங்குள்ள 30 சதவீதம் தெருவிளக்குகள் எரியவில்லை. குறிப்பாக மார்க்கையன்கோட்டை ரோடு, சாமிகுளம், சிவகாமியம்மன் கோயில் வளாகம், வண்டிபேட்டை பகுதியில் பெரும்பாலான விளக்குகள் எரியாததால், இரவில் இருளில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர்(பொ) சுந்தர்ராஜன் கூறுகையில், ''தெருவிளக்கு பராமரிக்க தனியார் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. எரியாத விளக்குகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X