பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுதேசிய தரச்சான்று பெறுவதற்கு தகுதி

Added : ஜன 08, 2020
Advertisement

கம்பம்,:கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு, மாநில அரசின்லட்சயா சான்றிதழ் பெற்று, தேசிய தரச்சான்று பெற தகுதிபெற்றுள்ளது. விரைவில் அதிகாரிகள் ஆய்வுக்கு வர உள்ளனர்.கம்பம் அரசு மருத்துவமனை 24 மணி நேரம் பிரசவம் பார்ப்பதற்கான சீமாங் சென்டர் அந்தஸ்து பெற்றது. தேவையானடாக்டர்கள், ஆக்சிஜன், ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு மாதத்திற்கு 200 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு பிரசவத்திற்கு சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டிற்கு, மாநில அரசின் லட்சயா சான்றிதழ் வழங்க கடந்த மாதம், அதிகாரிகள் ஆய்வு நடத் தினர். 85 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 'லட்சயா' சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, தேசிய தரச்சான்று பெற அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு தேர்வாகியுள்ளது. டில்லியில் உள்ள தேசிய தரச்சான்று துறையினர் விரைவில், இங்கு பிரசவ வார்டை ஆய்வு செய்ய வரவுள்ளனர். அந்த தரச்சான்று கிடைக்கும்பட்சத்தில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பிருப்பதாக, நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித் தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X