கடைகளில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆண்டிபட்டி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நவநீதன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று ஆண்டிபட்டியில் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.பலசரக்கு கடைகளில் உணவுக்கு பயன்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களில் 'பேக்கிங் 'தேதி, காலாவதி தேதி குறித்த சிலிப் இல்லாத பொருட்களை அப்புறப்படுத்தினர். அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை விற்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தனர்.உணவு பொருட்கள் குறித்து தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கையினால் எழுதாமல், பிரின்ட் செய்யப்பட வேண்டும் என்று எச்சரித்தனர். அயோடின் கலக்காத உப்பு உணவு தவிர்த்த பயன்பாட்டிற்கு விற்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அரசு உணவு பாதுகாப்பு விதிகளின்படி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீறும் கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தனர். பல்வேறு கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோவுக்கும் அதிகமான காலாவதியான பேக்கிங் செய்யப்பட்ட சிற்றுண்டி பொருட்களை அழித்தனர்.---------இறைச்சிக்கடைகளில் ஆய்வுகூடலுார்: கூடலுார் மெயின்பஜார், எல்.எப்.ரோடு பகுதியில் இறைச்சிக் கடைகள் அதிகம் உள்ளன. சுகாதாரமற்ற முறையில் ஆட்டிறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் கூறினர். இந்நிலையில், கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர் சிரஞ்சீவி ஆகியோர் இறைச்சிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அடுத்த சோதனையில் இந்த நிலை நீடித்தால் கூடுதலான அபராதத் தொகை விதிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், ஆடுகளை நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆடு அடிக்கும் தொட்டியில் வந்து அறுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டிறைச்சி முழுவதும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X