பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் அணையா விளக்கு

Added : ஜன 08, 2020
Advertisement
 புத்தேரி பெருமாள் கோவிலில் அணையா விளக்கு

பெண்ணாடம்:புத்தேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட அணையா விளக்கை, பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.
பெண்ணாடம் அடுத்த புத்தேரி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் அணையா விளக்கு அமைக்க அறங்காவலர்கள் குழு சார்பில், பித்தளை உலோகத்திலான அணையா விளக்கு, சுவாமி சன்னதி முன் அமைக்கப்பட்டது.அதனை, பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், தீபம் ஏற்றி, துவக்கி வைத்தார். பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன், கிராம பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X