சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் போலீஸ் நிலையம் முற்றுகை

Added : ஜன 08, 2020
Advertisement
 சிதம்பரம் போலீஸ் நிலையம் முற்றுகை

சிதம்பரம்:ஊழியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மின் ஊழியர்கள் சிதம்பரம் போலீஸ் நிலையம் முன், சாலை மறியல், தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில், நாளை ( 9ம் தேதி) தேர் திருவிழா நடக்கிறது. அதற்காக தேரோடும் வீதிகளில் உள்ள மரங்களின் கிளைகளை மின் ஊழியர்கள் அகற்றி வந்தனர். கீழவீதியில் மின் ஊழியர்கள் பாலச்சந்தர், சேகர், முருகேசன் ஆகியோர் மர கிளைகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் இருந்த இருவர் யாரை கேட்டு மரங்களை வெட்டுகிறீர்கள் என, ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், மின் ஊழியர்கள் 4 பேரையும் அவர்கள் தாக்கினர். பலத்த காயம் அடைந்த பாலச்சந்தர், 57; சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த மின் ஊழியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் நிலையத்திற்கு எதிரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.இருப்பினும், மின் ஊழியரை, தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். சிதம்பரத்தின் நான்கு வீதிகளிலும் மின் நிறுத்தம் செய்தனர். இதனால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X