சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா வங்கி ஊழியர் சங்கம் சார்பில், அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடந்தது.
சிதம்பரம் தெற்கு வீதி இந்தியன் வங்கி கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வங்கி ஊழியர் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். அவை தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். கார்ப்பரேஷன் வங்கி ராமதாஸ், தாலுகா பொது செயலாளர் இந்தியன் வங்கி ராவ் பங்கேற்று பேசினர்.வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும். வங்கி இணைப்பை கைவிட வேண்டும். விவசாயம் கடன் மற்றும் சிறு நடுத்தர கடன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கி ஊழியர்கள் அன்பழகன், கனகசபை, வெங்கடாசலம், பாலாஜி, பிரசன்னா, சுதாகர், முத்துக்குமார், வாஞ்சிதேவி, மதுமிதா, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தாலுகா துணை தலைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.கடலுார்கடலுார் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.இதனை வலியுறுத்தி, கடலுார், மஞ்சக்குப்பம் சிண்டிகேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க திருமலை, மாவட்ட வங்கி ஊழியர் சங்க உதவி தலைவர் ரமணி முன்னிலை வகித்தனர்.வங்கி ஊழியர் சங்க செயலர் குருபிரசாத், பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், கடலுார் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன் உட்பட பலர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். ராஜேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan K -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202016:59:31 IST Report Abuse
Narayanan K First let the bank staff work properly and ensure recovery of Loans and let the bank and branches in profit mode. Indian Bank is worst in terms of service as well as IT initiatives. Customers cannot be taken for granted.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X