சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கொடுமை பாசக்கார கணவர் கைது

Added : ஜன 08, 2020
Share
Advertisement

விருத்தாசலம்:மனைவியை கொடுமை படுத்திய கணவரை, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சி.கீரனுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 31. இவரது மனைவி கவிதா, 23. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது, 10 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது.இந்நிலையில், சிவக்குமார், அவரது தாய் செல்லம்மாள் இருவரும், புதிதாக இடம் வாங்க வேண்டும் என்று கவிதாவை கொடுமைப்படுத்தியதால், அவரது வீட்டிலிருந்து ஒன்றரை லட்சம் பணம் வாங்கி கொடுத்துள்ளார்.இருப்பினும், மனைவி மீது சந்தேகம் கொண்ட சிவக்குமார் அவரை திட்டி, கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா, திருமணத்தின்போது வழங்கிய சீதனத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.அதற்கு, பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருவதாக கூறிச் சென்ற சிவக்குமார், வீட்டிற்கு சென்று, கவிதாவை தாக்கினார். விருத்தாசலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X