சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளரை தாக்கியவரை கைது செய்ய கோரி வேலை நிறுத்தம்

Added : ஜன 08, 2020
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் துப்புரவு பணியை மேற்கொள்ள தனியாரிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. தினமும் 60 பேர் துப்புரவு பணி செய்து வருகின்றனர். ஒப்பந்த துப்புரவு பணியாளரான கைலாசநாதர் கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 47; மற்றும் 4 பெண்கள் அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் தெருக்களில் கழிவுநீர் கால்வாயில் எடுத்த மண்ணை குவித்து வைத்துள்ளனர் அதை சுத்தம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.நகராட்சி அதிகாரிகளிடம் தான் கூற வேண்டும். எங்களுக்கு கொடுத்த வேலையை தான் செய்ய முடியும் என செல்வராஜ் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், செல்வராஜை தாக்கியதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.துப்புரவு பணியாளரை தாக்கிய தினேஷை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் நகராட்சி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, வேலைக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X