சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement
 குண்டர் சட்டத்தில்  வாலிபர் கைது

கடலுார்:மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
கடந்த மாதம் 19ம் தேதி, மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்,33; கிராம உதவியாளர் தவமணி ஆகியோர் மேமாத்தூர் மணிமுத்தாறு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர், அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் மீது, லாரியை ஏற்ற முயன்ற டிரைவர் லாரியுடன் தப்பிச்சென்றனர்.
இது குறித்து கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து லாரி டிரைவர் கச்சிபெருமாநத்தம் வடக்குத் தெருவை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவக்குமார், 27; என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது வேப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், சிவகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள சிவகுமாரிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான தகவலை போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X