பொது செய்தி

இந்தியா

நுால் வெளியீட்டு விழா

Added : ஜன 08, 2020
Advertisement
 நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி:புதுச்சேரி நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம் சார்பில் அமிர்தவள்ளி எழுதிய நுால்கள் வெளியீட்டு விழா தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன பட்ட ஆய்வாளர் சுபாஷினி வரவேற்றார். தமிழ்ச்சங்க செயலர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பெண்ணியம் செல்வகுமாரி தொடக்கவுரை ஆற்றினார்.புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் இளமதி ஜானகிராமன், தனியார் கல்லுாரி துணை முதல்வர் சேகர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் ராஜலட்சுமி வாழ்த்தி பேசினர்.
அமிர்தவள்ளி எழுதிய கவிஞர் ராஜலட்சுமியின் படைப்புகள் திறனாய்பு, நற்றிணையில் சமூகச் சொல்லாடல் பகுப்பாய்வு ஆகிய நுாலினை, சாகித்திய அகாதமி விருதாளர் ஜோ.டி.குருஸ் வெளியிட, தமிழ் சங்க பொருளாளர் சீனு மோகன்தாசு, தனியார் கல்லுாரி முதல்வர் சுதா கிரிஸ்டி ஜாய் பெற்றுக் கொண்டனர்.பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீவித்யா, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் பட்டம்மாள், ஆசிரியர் விசாகன் ஆகியோர் நுால் ஆய்வுரை வழங்கினர். அமிர்தவள்ளி, ஏற்புரை வழங்கினார். ஏற்பாடுகளை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன பட்ட ஆய்வாளர் கலைவாணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X