செங்கை குறைதீர் முகாம் விழிப்புணர்வு இல்லை

Added : ஜன 08, 2020
Advertisement

காஞ்சிபுரம்:செங்கல்பட்டில் குறைதீர் கூட்டம் நடப்பது தெரியாமல், காஞ்சிபுரத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் பலரும் வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திங்கட்கிழமை தோறும், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது.மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவான, நவம்பர், 29ம் தேதிக்கு பின், செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், வண்டலுார், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், செய்யூர், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கின்றனர்.ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது தெரியாமல், காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, பலரும் வருவது தொடர்கிறது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது குறித்து, எட்டு தாலுகாக்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X