பொது செய்தி

இந்தியா

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 08, 2020
Advertisement
 பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண்டமங்கலம்:கண்டமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தின் சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். போஷன் அபியான் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் வரவேற்றார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக்குமார், 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, கண்டமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.போஷன் அபியான் திட்ட வட்டார திட்ட உதவியாளர் ஓம்சக்தி, புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவியாளர் தியாகராஜன், கண்டமங்கலம் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார செவிலியர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் சாந்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X