கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு வலை 

Added : ஜன 08, 2020
Advertisement

பாகூர்:கூலித் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம், இளவரசன் நகரை சேர்ந்தவர் பகலவன் (எ) வீரப்பன் 45; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரை பார்ப்பதற்காக குமார் என்பவர் வந்துள்ளார். வீட்டின் முன்பாக நின்றிருந்த அவரிடம், அவ்வழியாக சென்ற தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்த சிலம்பு (எ) சிலம்பரசன், ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டு தகராறு செய்தார். அவரிடம் பகலவன், இங்கு எதுவும் தகராறு செய்ய வேண்டாம் என கூறினார்.
ஆத்திரமடைந்த சிலம்பு, கிரிக்கெட் பேட்டால், பகலவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இதில், காயமடைந்த பகலவன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்த புகாரின் பேரின் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சிலம்புவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X